Translate

14 ஜனவரி, 2018

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Saranam Ayyappa song Tamil Lyrics




அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா



வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா
எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா .
 English


Annadhaana prabhuvey Saranam Ayyappaa
Aariyangaavil aiyaney saranam aiyappaa
Ponnadiyaip Potrugirom Saranam aiyappaa
kannanin maindhaney saranam ponnaiyappaa

vanpulimel amarndhavaney saranam ponnaiyappaa
vaavaru swaami thozhaney saranam ponnaiyappaa
innal yaavum theerppavaney saranam ponnaiyappaa
pandhalanin selvaney saranam ponnaiyappaa
arindhum ariyamalum seidha pizhai thannai
porutharulvaai nee saranam aiyappaa

saranam aiyappaa swaami saranama iyappaa
saranam aiyappaa swaami saranama iyappaa

Achankovil araseஅச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா : கே. வீரமணி பாடியது




அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா......
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா .......

சாமி பொன்னய்யப்பா சரணம் பொன்னய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா



அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா (சாமி பொன்னய்யப்பா )



ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியாள் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே வா
தர்மஞான‌ சாஸ்தாவே தயவுடனே நீ வா
மறைதேடும் சபரிமலை மன்னவனே நீ வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலகனே வா
மன்னவனே மணிகண்ட‌னே மகிழ்வுடனே வா





வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா
தேவர்களும் உனைப்பணிய‌ காந்தமலையிலே நீ
ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை
நாவார‌ உனை அழைத்தோம் சுவாமியே
சரணம் ஐயப்பா (சாமி பொன்னய்யப்பா 

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை : கே. வீரமணி பாடியது. Ellorum Sernthu Sollungo Song song Tamil Lyrics சாமி ! வீடியோ பாருங்க‌



சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
கன்னிமூல‌ கணபதி பகவானே... சரணம் ஐய்யப்போ
ஹரிஹர‌ சுதனே... சரணம் ஐய்யப்போ
அச்சன்கோவில் ஆண்டவனே... சரணம் ஐய்யப்போ
அனாத‌ இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ


 
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. .
சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ

சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா


 

 
முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ

முத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ
மாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ

சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா

கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
நினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ

நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
நாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ

பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ
பந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ


 
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ
சுவாமியே .. சரணம் ஐய்யப்போ

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Malairajan Thirukovil Maniyaduthey Ayyappan song Tamil Lyrics சாமி ! வீடியோ பாருங்க‌


மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ( x 2)
அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)
(மாலைராஜன் )

வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)
(மாலைராஜன் )

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே ( x 2)

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே ( x 2)
(மாலைராஜன் )

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி ( x 2)
(மாலைராஜன் )

கன்னிமூல‌ கணபதிய வேண்டிக்கிட்டு நாங்க‌ கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் பாடல் வரிகள்.Kannimoola ganapathiyai vendikittu



கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க‌
ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்

குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2



ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாக‌ வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2

எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா x2



காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா x2
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு x2
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா x2

மகர‌ ஜோதியைக் கண்டு மனமார‌ சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா
சாமியே சரணம் x3…சாமியே .... சரணம் ..x2

ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா பாடல் வரிகள். Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics சாமி ! வீடியோ பாருங்க‌



ஓம் ஓம் அய்யப்பா
ஓம் குரு நாதா அய்யப்பா

அரனார் பாலா அய்யப்பா
அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் )



ஆபத் பாந்தவா அய்யப்பா
ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் )

இருமுடிப் பிரியா அய்யப்பா
இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் )



ஈசன் மகனே அய்யப்பா
ஈஸ்வர‌ மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் )

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம் )

ஊக்கம் தருபவா அய்யப்பா
ஊழ்வினை அறுப்பவா அய்யப்பா (ஓம் ஓம் )

எங்கும் நிறைந்தவா அய்யப்பா
எங்கள் நாயகா அய்யப்பா (ஓம் ஓம் )

பம்பையின் பாலா அய்யப்பா
பந்தள‌ வேந்தே அய்யப்பா (ஓம் ஓம் )

வன்புலி வாஹனா அய்யப்பா
வனத்திலிருப்பவா அய்யப்பா

சபரி கிரீஸா அய்யப்பா
சாந்த‌ சொரூபே அய்யப்பா (ஓம் ஓம் )

சபரி கிரீஸா அய்யப்பா
சாஸ்வத‌ ரூபே அய்யப்பா (ஓம் ஓம் 

சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது பாடல் வரிகள். Sabarimalaiyile swami maarkalin sanjalam ellam vilakuthu- K. Veeramani Ayyappa song Tamil Lyrics சாமி ! வீடியோ பாருங்க‌



சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே.... ஐ சரணம் ஐயப்பா

சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சபரிமலையிலே சுவாமி மார்களின்
சஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌
சாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம்
கோடிக் கோடியாய் வருகுது
ஆயிரம் கோடு சூரியன் போலே
ஐயப்பன் முகம் ஜொலிக்குது
அருகில் சென்று மனமுருகிப் பாடி
அவன் பதமலர் தனையே தேடுது
(சபரிமலையிலே )



கோவில் மணியோசை கேட்டதுமே
நம் கவலையெல்லாம் பறக்குது
கோமகன் அழகை காண‌ மனம்
எண்ணி எண்ணி துடிக்குது
பாலபிஷேகம் கண்டபின்னே நம்
பாவங்களெல்லாம் கரையுது
பணிந்து அவனின் புகழ் பாடப்பாட‌
நம் உள்ளமெல்லாம் உருகுது
(சபரிமலையிலே )



காடுமலையிலே நடந்திடும் போது
ஐயன் சரண‌ ஒலி கேட்குது
சாமியே ஐயப்போ
சாமி சரணம் ஐயப்பா சரணம்
காடுமலையிலே நடந்திடும் போது ஐயன்
சரண‌ ஒலி கேட்குது அந்த‌
ஐயனின் சரணம் கேட்டதுமே அங்கு
யானைகளெல்லாம் விலகுது
கற்பூர‌ ஒளியிலே ஐயனின் தரிசனம்
காந்தம் போலே இழுக்குது
காருண்ய‌ மூர்த்தியின் தவக்கோலம்
கண்டால் மனமே சிலிர்க்குது
(சபரிமலையிலே )
சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா -- x 

13 ஜனவரி, 2018


அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா பாடல் வரிகள். Arulmanakkum aandavane Ayyappa K. Veeramani Ayyappa song Tamil Lyric



அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா
இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா



உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா
ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா
என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா
ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்)

ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா
ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா
ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா
ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா
ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா
செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா...
அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா..
ஐயப்பா..சுவாமி.. ஐயப்பா..சுவாமி..
ஐயப்பா..சுவாமி..ஐயப்பா.

கே. வீரமணி பாடிய‌ 'அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஐயப்பன் பாடல் வரிகள். Hariyum Haranum iNainthu pettra selvanaam Ayyappan K. Veeramani Ayyappa song Tamil Lyrics பாடல் வரிகள் மட்டும்



அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்
ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்
இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்
ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்
உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்
எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்
ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்
- எங்கள் அய்யப்பன்



ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன்
ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன்
ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்
- எங்கள் அய்யப்பன்
கே. வீரமணி பாடிய‌ 'அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்

காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை ஐயப்பன் பாடல் வரிகள். Kaathu Rakshikanum kannimaarkalai Ayyappan K. Veeramani Ayyappa song Tamil Lyrics




காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை
கன்னிமூல‌ கணபதியே நீ
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்
கன்னிமூல‌ கண‌பதியே

காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே
மாளிகை புறத்து மஞ்சம்மா
மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா

நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே
அய்யனே உந்தன் அழகைக் கண்டால்
பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது
நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே
மெய் சிலிர்க்குது மலையிலே
தையினிலே உந்தன் சந்நதிகாண‌
உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே
சத்தியமான‌ பொன்னு பதினெட்டு படி பகவானே
சுவாமி பொன்னு பகவானே அய்யா பொன்னு பகவானே
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்கவேணுமே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
என்று சொல்லி நாங்கள் வந்தோமே
சங்கர‌ மோகினி பாலனே உந்தன்
தரிசனம் தனைக்காண‌ தயை புரிவாய் தேவனே
தயை புரிவாய் தேவியே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப‌ சரணம் ஐயப்பா

கே. வீரமணி பாடிய‌ 'காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல‌ கணபதியே' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்

பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா ஐயப்பன் பாடல் வரிகள். Pandhala Raja Pamba vasa Saranam Saranam Ayyappa K. Veeramani Ayyappa song Tamil Lyrics பாடல் வரிகள் மட்டும்



சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்
பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா)

அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா
சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா
முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா
அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா
அச்சம் அகற்றி ஆசியும் கூறி அருள்மலை ஏற்றிடு ஐயப்பா (பந்தளராஜா)

வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா
கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா
அரிகரசுதனே அநாத‌ நாதா சரணம் சரணம் ஐயப்பா
அருள்மிகும் சபரியில் அரசே நீதான் சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

கே. வீரமணி பாடிய‌ 'பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை ஐயப்பன் பாடல் வரிகள். Saranam viliththaal Maranam illai Sastha naamam - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



சாமியே... ஐ
சரணம் ஐயப்போ
சரண‌ கோஷப்பிரியனே
சரணம் ஐயப்போ
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
தருணம் இதுதான் சரணம்போடு
தர்ம‌ சஸ்தா பாதம்பாடு (சரணம் விளித்தால்)

காக்கும் தெய்வம் திருமால் நாமம்
கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம்
கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம்
கூவி வந்தால் புவியில் ஷேமம் (சரணம் விளித்தால்)

காடும் மேடும் வீடும் வாசல்
கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை
ஆடும் மனத்தை அடக்கி வா வா
ஐயன் மேடை நாடி வா வா (சரணம் விளித்தால்)

நெய்போல் உருகும் மனதில் ஐயன்
நேரில் வருவான் நிறையத் தருவான்
குருவை நாடு மாலையை சூடு
கோடி ஞான‌ ஜோதியை பாடு
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்போ சரணம் சரணம் பொன் ஐயப்போ

கே. வீரமணி பாடிய‌ 'சரணம் விளித்தால் மரணம் இல்லை' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்

8 ஜனவரி, 2018

பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா ஐயப்பன் பாடல் வரிகள். Pandhala Raja Pamba vasa Saranam Saranam Ayyappa K. Veeramani Ayyappa song Tamil Lyrics பாடல் வரிகள் மட்டும்


சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்
பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா
சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா)

அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா
சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா
முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா
அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா
அச்சம் அகற்றி ஆசியும் கூறி அருள்மலை ஏற்றிடு ஐயப்பா (பந்தளராஜா)

வில்லாளிவீரா வீரமணிகண்டா சரணம் சரணம் ஐயப்பா
கலியுகவரதா கண்ணனின் மைந்தா சரணம் சரணம் ஐயப்பா
அரிகரசுதனே அநாத‌ நாதா சரணம் சரணம் ஐயப்பா
அருள்மிகும் சபரியில் அரசே நீதான் சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா)

கே. வீரமணி பாடிய‌ 'பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை ஐயப்பன் பாடல் வரிகள். Saranam viliththaal Maranam illai Sastha naamam - K. Veeramani Ayyappa song Tamil Lyrics


சாமியே... ஐ
சரணம் ஐயப்போ
சரண‌ கோஷப்பிரியனே
சரணம் ஐயப்போ
சரணம் விளித்தால் மரணம் இல்லை
சாஸ்தா நாமம் அருளின் எல்லை
தருணம் இதுதான் சரணம்போடு
தர்ம‌ சஸ்தா பாதம்பாடு (சரணம் விளித்தால்)

காக்கும் தெய்வம் திருமால் நாமம்
கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம்
கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம்
கூவி வந்தால் புவியில் ஷேமம் (சரணம் விளித்தால்)

காடும் மேடும் வீடும் வாசல்
கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை
ஆடும் மனத்தை அடக்கி வா வா
ஐயன் மேடை நாடி வா வா (சரணம் விளித்தால்)

நெய்போல் உருகும் மனதில் ஐயன்
நேரில் வருவான் நிறையத் தருவான்
குருவை நாடு மாலையை சூடு
கோடி ஞான‌ ஜோதியை பாடு
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்போ சரணம் சரணம் பொன் ஐயப்போ

கே. வீரமணி பாடிய‌ 'சரணம் விளித்தால் மரணம் இல்லை' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Saraname Saranam Ponn ayyappa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌
முகில் வண்ணன் நாராயணன்
ஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன்
தேவர்கள் மகிழும் வண்ணம்
தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன்
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌
திவ்ய‌ நாமத்தைச் சொன்னவர்க்கே
தர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌
எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக்
கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே
சர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌
பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி
ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம்
சுவாமி மாரே ஐயப்பன் மாரே

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னைய்யப்பா
சரணம் சரணம் என்று சொல்லிப்பாடுவோம்
சபரிமலையிலே ஒன்று கூடுவோம்
கார்த்திகையில் மாலைதனைப் போட்டுக் கொள்ளுவோம்
மார்கழியில் அவன் புகழ் பாடி மகிழ்வோம் (சரணம் சரணமே)

பள்ளிக்கட்டைக் கட்டிக்கொண்டு யாத்திரை செல்ல‌
கல்லும் முள்ளும் மெத்தையென்று பாதங்கள் செல்ல‌
கோட்டை எரிமேலிதன்னில் பேட்டையும் துள்ள‌
நாம் ஆடிப்பாடி செல்வோம் ஐயன் புகழ் மணக்க‌ (சரணம் சரணமே)

காடுவழி போகும்போது கடுவாய் கரடி புலி
யானையைக் கண்டு அஞ்சாத‌ பேர்களுமுண்டோ
சமயத்தில் வந்து காக்க‌ மணிகண்டன் துணையுண்டு
சாஸ்தாவை நம்பி நாம் நடை கட்டுவோம் அந்த‌
சாஸ்தாவை நம்பி நாம் நடைகட்டுவோம் (சரணம் சரணமே)



பொன்னாபரண‌ மணிந்த‌ பொன்னம்பல‌ வாசனவன்
கற்பூரதீபமும் கண்டு மகிழ்ந்திடுவோம்
ஜோதியைக் கண்டவுடனே நாமெல்லோரும்
ஒன்று சேர்ந்து கூட்டுச் சரண‌ கோஷமும் போட்டு மகிழ்வோம் (சரணம் சரணமே)

கே. வீரமணி பாடிய‌ 'சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Seeridum Pulithanil Yeriye valamvarum selvane Ayyappa ayyappa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics பாடல் வரிகள் மட்டும்



சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா
உன்னைச் சிந்திக்க‌ மனமுண்டு சேவிக்கக் கரமுண்டு
சாமியே ஐயப்பா (சீறிடும் )

சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா
காரிருள் வழிதனில் ஜோதியாய் துணைவரும் கடவுளே ஐயப்பா
உனைக் காணவே வழியுண்டு பாடவே மொழியுண்டு சுவாமியே ஐயப்பா (சீறிடும் )

வீரத்தின் விளை நிலம் வெற்றியின் அணிகலன் வேந்தனே ஐயப்பா
உன்னை வாழ்த்தினால் பொருளுண்டு வணங்கினால் அருளுண்டு வள்ளலே ஐயப்பா
ஈரேழு லோகமும் என்னாளும் வழிபடும் இறைவனே ஐயப்பா
என் தந்தையும் நீயே தாயும் நீயே சுவாமியே ஐயப்பா (சீறிடும் )

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Seeridum Pulithanil Yeriye valamvarum selvane Ayyappa ayyappa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
(ஜீவன்)

கார்த்திகை தோறும் மாலை அணிந்து
நாற்பது நாளும் நோன்பும் இருந்து
நாவில் ஐயன் நாமம் பொழிந்து
நடந்தே சென்று கோவிலடைந்து
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்
(ஜீவன்)

நெய் விள‌க்காலே அலங்காரம்
சரணம் என்னும் ஓம்காரம்
சர்வமும் அதிலே ரீங்காரம்

ஆசையில் மோதும் அலையாவும்
ஜோதியைக் கண்டால் தெளிவாகும் - மகர‌
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்
(ஜீவன்)



பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்
மகிஷியை வென்றே வாழ்வளித்தான்
மழலை வடிவில் அருள் கொடுத்தான்
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்
அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த‌
அகிலமும் வாழவும் துணை இருப்பான் (ஜீவன்)

வீடியோ

நல்லவர்கள் கூடும் மலை நன்மைகள் வழங்கும் மலை ஐயப்பன் பாடல் வரிகள். Nallavargal Koodum Malai nanmaigal vazhangum Malai - K. Veeramani Ayyappa song Tamil Lyrics


 பாடல் வரிகள் மட்டும்

நல்லவர்கள் கூடும் மலை
நன்மைகள் வழங்கும் மலை
அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை
இருமுடிகள் சேரும் மலை
இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை)

பதினெட்டுப் படிகள் மின்னும்
பந்தளத்து மன்னன் மலை
மாலை இட்டார் திரளும் மலை
ஓங்கினுப்பார் வண‌ங்கும் மலை
காலமெல்லாம் உலகனைத்தும்
காக்கும் எங்கள் ஐயன்மலை
தவமிருக்கும் தெய்வமலை
தன் அருளை பொழியும் மலை
மகரச்சுடர் ஒளிவடிவில்
மணிகண்டன் தோன்றும் மலை

சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Paaduvom Saami saranam paaduvom Sabari Nathanai Potri - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்)

வான்மழை மேகம் வந்து
பூ மழை தூவும்..
ஐயன் தாமரை பாதம் ..
அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்)

பால் அபிஷேகம் ..
கண்டால் பாவங்கள் தீரும்
என்றும் நெய் அபிஷேகம் ..
கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்)
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்



மாமலை தோறும் ‍எங்கள்
மணிகண்டன் நாதம் ..
அவன் தாழ் பணி போதும்
நெஞ்சம் தூய்மையில் வாழும்
ஆலய‌ தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள‌ ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
ஆலய‌ தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள‌ ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்

குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் ஐயப்பன் பாடல் வரிகள். Kuzhathupulaiyil Unnai Kandal - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



குளத்துப்புழையில் உன்னைக் கண்டால்

குடும்பம் தழைக்குமே எங்கள்
குடும்பம் தழைக்குமே
அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால்
அச்சம் விலகுமே எங்கள்
அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்)

ஆரியங்காவில் பூசைகள் செய்தால்
அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே
கோரியபடியே யாவும் கிடைக்கும்
குலம் செழிக்குமே நம்ம‌
குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்)



பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே
ஒரு பாடல் பிறக்குமே
பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே
அழுதை நதியில் களங்கம் தீர‌ குளிக்க‌ வேண்டுமே
அன்பர் குளிக்க‌ வேண்டுமே
குளிக்கும் வேளை அகத்திலுள்ள‌ ஐயம்
அகலுமே நல்ல‌ அறிவு பெருகுமே (குளத்துப்புழையில்)



பம்பையிலே நீராடி விளக்கை ஏற்று
பலனும் கிடைக்குமே நல்ல‌
பயனும் கிடைக்குமே
சபரிமலையின் மகரஜோதி வானில் தெரியுமே
நம் வாழ்வில் தெரியுமே
படிகள் ஏறி அவனைக் காண‌ அபயம் கிடைக்குமே
அவன் சரணம் கிடைக்குமே
துதிகள் பாடி தரிச்ப்போருக்கு ஞானம்
பிறக்குமே அஞ்ஞானம் மறக்குமே (குளத்துப்புழையில்)
கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ 'கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி' ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Enna varam vendum kelungkal - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் - சபரி

மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன‌ வரம்)
பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள் ஐயன்
பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன‌ வரம்)

மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து
அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து
மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து
ஒரு கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன‌ வரம்)



சத்தியச் சுடராக‌ சபரியில் கோவில் கொண்டான்
த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான்
குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்
வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம் (என்ன‌ வரம்)

ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஐயப்பா சரணம் ஐயப்பா

அருளைக் கொடுப்பது உன் கையப்பா
மெய்யப்பா இது மெய்யப்பா
இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்)

பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்
மன்மதன் மகனே ஐயப்பா
தயவுடன் வாரும் சக்தியைத் தாரும்
சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்)



மண்டல‌ விரதமே கொண்டு உன்னை
அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை
அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌
இந்த‌ அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்)

சபரிமலை சென்று உனைக் கண்டால்
சஞ்சலங்கள் என்றும் இல்லையப்பா
அபயம் என்று உன்னைச் சரணடைந்தால்
நீ அன்புடன் காக்கும் தெய்வமப்பா (ஐயப்பா சரணம்)

மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் அருள் விளக்கு ஐயப்பன் பாடல் வரிகள். Makarathin Mani Vilakku Manikandan Arul Vilakku - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



மகரத்தின் மணிவிளக்கு

மணிகண்டன் அருள் விளக்கு
இறைவனின் திருவிளக்கு
எந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்)

அமைதியின் ஒளிவிளக்கு
ஐயப்பனே குலவிளக்கு
சபரிமலை விளக்கு.... விளக்கு
நல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்)



தலைவனின் சுடர் விளக்கு
தைமாதத் தனி விளக்கு
ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக்
காணும் பணி நமக்கு (மகரத்தின்)

நெய்யால் திகழ் விளக்கு
நினைத்ததெல்லாம் தரும் விளக்கு
தெய்வத்தவ‌ விளக்கு
திருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)

ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர‌ சுதனே ஐயப்பாஐயப்பன் பாடல் வரிகள். Athiyum Neeye Anthamum Neeye Harihara Suthane - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஆதியும் நீயே அந்தமும் நீயே

அரிஹர‌ சுதனே ஐயப்பா
மாதவ‌ மணியே மாணிக்க‌ ஒளியே
மணிகண்ட‌ சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே)

நீதியின் குரலே நித்திய‌ அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே)



காலையில் கதிரே மாலையில் மதியே
கற்பூர‌ ஜோதியே ஐயப்பா
ஆலய‌ அரசே அன்பின் பரிசே
அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே)

குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத‌ மூர்த்தியே ஐயப்பா (ஆதியும் நீயே)

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் ஐயப்பன் பாடல் வரிகள். Omkara Natham Uyarvana Vedam - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்

தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார‌)
ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்
அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்
பனிதூவும் மாதம் மணிமாலை போடும்
மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார‌)



பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்
படியேறும் போதே நலம் கோடி சேரும்
மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம்
மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம் (ஓங்கார‌)

காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்
மனமொன்று போதும் வேறென்ன‌ வேண்டும்
இல்லங்கள் தோறும் நீ தானே தெய்வம்
என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம் (ஓங்கார‌)

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Solli Koopiduvom Sabarimalai Vaasanai - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை

வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை
அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர‌ சுதன் ஐயப்பனை

வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை



ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா ||

சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை
பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை
அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை

வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப்
பேட்டை செல்லுவோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
கோட்டைக் காவலன் வாவரு சாமியை
கொண்டாடி மகிழ்வோம்



ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு (ஸ்வாமி சரணம் ஐயப்பா)

வீடியோ

பம்பை நதிக்கரையே... உந்தன் பெருமைக்கு இணை இல்லையே ஐயப்பன் பாடல் வரிகள். Pampai nathikaraiye untham perumaikku inai illaiye - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



பம்பை நதிக்கரையே... உந்தன்

பெருமைக்கு இணை இல்லையே
அரிஹரன் திருவருளே நீதான்
அறிந்தாய் முதன் முதலே
ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை).

தொழுவார் ஐயப்பன் திருவடியில்
அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்
அருள் மழை பொழிந்தது உன் மடியில்
அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை).

அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி
அனுதினம் வருவார் கோவிலிலே
அவரவர் மனதில் அருளாய் இறங்கி
கருணையை பொழிவான் வாழ்வினிலே
கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை).



சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்
சாந்தியை கொடுக்கும் சபரிமலை
ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்
பிறவியின் பயனே தெய்வநிலை
பிறவியின் பயனே தெய்வநிலை. (பம்பை).

வீடியோ

எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் ஐயப்பன் பாடல் வரிகள். Enge manakkuthu santhanam enge manakkuthu Ayyappa sami Kovilile- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே

எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது

ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது
இன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது)

எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
திருநீறும் மண‌க்குது பன்னீரும் மண‌க்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மண‌க்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது (எங்கே மண‌க்குது)

பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது (எங்கே மண‌க்குது)

பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண‌ உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது (எங்கே மண‌க்குது)



பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
ஓங்கார‌ நாதத்திலே எழுந்து வருகிறான். (எங்கே மண‌க்குது)

வீடியோ

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை ஐயப்பன் பாடல் வரிகள். Dharisanam Kanden Paravasam Konden- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்

அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்)

தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ...ஆ...
கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை
வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்)
வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன்

மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல்
தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்)

பாடல் வீடியோக்கு கில்
வீடியோ




ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன்
ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன்
சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன்
சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Kadu malai kadanthu vanthom Ayyappa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா

காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா)
வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி
வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா)
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே

ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள்
பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள்
பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ
ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை)

நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா ( x 2 )
வேலவனின் அருமைத் தம்பி காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா (காடுமலை)



மணிகண்டா உன் கருணை அமுதமப்பா உன்
புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா
மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா x2
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே (காடுமலை)
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா

விடியே

ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappanai Kaana vaarungkal Avan Naamathai Ellorum Paadungkal- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன்
நாமத்தை எல்லோரும் பாடுங்கள்

தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன்
அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை)

ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி
சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌
ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி
சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌

பதினெட்டாம் படி கடந்து அவன்பாத‌ மலரணையை
தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை)
பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் பொன்னையப்பா
பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும் சரணம் பொன்னையப்பா
அன்பு கொண்ட‌ கரம் இன்பம் தரும் சரணம் பொன்னையப்பா
அன்பு கொண்டு தரும் அன்பும் நெஞ்சில் வரும் சரணம்
பொன்னைய்யப்பா

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Ayyan Arul Undu Endrum Bayamillai povom Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை
போவோம் சபரிமலை

அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்
என்றும் பக்தரைக் காப்பவனே

ஐயப்பா சரணம் ஐயப்பா
அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம்
அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை
ஏறிவந்தோம் (ஐய்யன்)

ஐயப்பா சரணம் ஐயப்பா
பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய்
எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது
மணிகண்ட‌ பெருமானே

பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா
சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா
சபரிமலை நாதா சபரிமலை நாதா (அய்யன்)

ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai Kodupathu Un Kaiappa Meeiyappa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஐயப்பா சரணம் ஐயப்பா
அருளைக் கொடுப்பது உன் கையப்பா

மெய்யப்பா இது மெய்யப்பா
இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ).

பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்
மன்மதன் மகனே ஐயப்பா
தயவுடன் வாரும் சக்தியைத் தாரும்
சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ).

மண்டல விரதமே கொண்டு உன்னை
அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை
அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர
இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. (ஐயப்பா ).


சபரிமலை சென்று உனைக் கண்டால்
சஞ்சலங்கள் என்றும் இல்லையப்பா
அபயம் என்று உன்னைச் சரணடைந்தால்
நீ அன்புடன் காக்கும் தெய்வமப்பா. (ஐயப்பா

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை ஐயப்பன் பாடல் வரிகள். Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



நல் முத்து மணியோடு
ஒளி சிந்தும் மாலை
நவரத்ன‌ ஒளியோடு
சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை
அய்யனின் கடைக்கண்ணில்
அன்பெனும் மாலை
அழுதையில் குளித்திடும்
அழகுமணி மாலை...
பம்பையில் பாலனின்
பவள‌மணி மாலை...

ஐந்து மலை வாசனின்
அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்
அருள் கொஞ்சும் மாலை
ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை


கன்னியின் கழுத்தினில்
அரங்கேறும் மாலை
முத்தோடும் மணியோடும்
முழங்கிடும் மாலை
முக்கண்ணன் மகனான‌
மணிகண்டன் மாலை -- கழுத்தோடு உறவாடும்
காந்தமலை மாலை ..
காண‌வரும் பக்தர்க்கு
காட்சிதரும் மாலை...

பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Bhagavan Saranam Bhagavathi Saranam - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா

பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாசா
கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்

பால் அபிஷேகம் உனக்கப்பா
பாலகனைக் கடைக்கண் பாரப்பா
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா

கற்பூர‌ தீபம் உனக்கப்பா உன்
பொற்பத‌ மலர்கள் எனக்கப்பா
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா

நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா
நெய்யபிஷேகம் உனக்கப்பா உன்
திவ்ய‌ தரிசனம் எமக்கப்பா

தையினில் வருவோம் ஐயப்பா அருள்
செய்யப்பா மனம் வைய்யப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவானே பகவதியே தேவனே தேவியே
ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்

மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Malai Meethu Maniyosai Ayyappa Song - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா

அலை தானோ தலை தானோ ஐயப்பா
அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா

தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே
தொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே
திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே - கால்
நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே
அழுதையில் நீராடி செல்கின்றவ‌ர்
அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கரிமலை அருள் தன்னை கான்கின்றவர்
பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்
பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம்
பொருள் கணபதி தன்னை வனங்கி
பக்தியில் பொங்கிடுவார்

நீலி மலை தனிலேறி நடந்து
சபரியை நெருங்கிடுவார் அங்கே
நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு
சரங்குத்தி வண‌ங்கிடுவார்

பதினெட்டு படியினில் பூஜை நடத்தும்
பக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார்
தம்மை மற‌ந்தார் ஐயா உனை நாடி

அருட்பெருஞ்சோதி மிகப் பெரும் கருணை
ஆனந்த‌ ஒளி வீசும் தினம் அங்கே எரியும்
சோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்

சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியேAyyappa Swamiye Arul Seiyappa Swamiye

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamiye Arul Seiyappa Swamiye - K. Veeramani Ayyappa song Tamil Lyrics

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே
வெற்றிக் கருளும் சபரிமலைக்கு

விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும்
சற்று மறந்து தன்னை உணர்ந்தால்
சத்திய‌ முரசம் சுற்றி முழக்கும் (ஐயப்ப)

மாலையணிந்து ஆலயம் வந்தால்
பால்முகம்போல் வாழ்வும் மணக்கும்
குத்தும் கல்லும் கூரிய‌ முள்ளும்
மெத்தையாக்கும் மெய்யருள் சேர்க்கும் (ஐயப்ப)

பம்பையாற்றில் ஆடிப் பணிந்தால்
பாற்கடல் வாசன் ஆற்றல் பிறக்கும் (ஐயப்ப)

உள்ள‌ விளக்கம் உணமை விளக்கம்
ஒளியின் விளக்கம் மகர‌ விளக்கே (ஐயப்ப)

மண்டல‌ விரதம் மணிகண்டன் விரதம்
தொண்டர்கள் விரதம் திருவடிச் சரணம்

சித்தம் விளைந்தால் சித்தி கிடைக்கும்
பக்தி விளைந்தால் முக்தி கிடைக்கும் (ஐயப்ப)

நெய்யபிஷேகம் சாமிக்கே
ஐயனின் கருணை பூமிக்கே (ஐயப்ப)

பதினெட்டம் திருப்படி தொட்டு
பதிமுகம் காண‌ நடைகட்டு
இருமுடி கட்டு திருவடி காண‌
ஏற்றவர் போற்றும் ஜோதிமலைக்கே (ஐயப்ப)

பொற்பத‌ மேடை அற்புத‌ மேடை
நற்பத‌ மேடை நாயகன் மேடை
சங்கம் வந்தால் சாந்தி கிடைக்கும்
சக்தி கிடைத்தால் சரணம் கிடைக்கும்
சபரிக்கு வந்தால் மோட்சம் கிடைக்கும்
சற்குரு நாதன் காட்சி கிடைக்கும் (ஐயப்ப

வீடியோ


ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappan Malai Ku Poga Maalai Pootukkoo Vazhimuraiyai sollitharein - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ
வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் )

பலவருஷம் மலைக்கு போன‌ பழுத்த‌ சாமியை
பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும்
குருவாக‌ அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும்
துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும்
காலையிலே நீராடி நீரணியணும்
கன்னிமூல‌ கணபதியை நீ நினைக்கணும்
மாலையை குரு கையாலே நீ அணியணும்
மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும்
(ஐயப்பனின்)

ஆறுவாரம் கடுமையாக‌ நோன்பிருக்கணும்
ஆடையிலே கருப்பு நீலம் நிறமிருக்கணும்
ஆடையிலே காவி நீலம் நிறமிருக்கணும்
காலையிலும் மாலையிலும் கோவில் போகணும் (ஐயப்பனின்)

கட்டாயும் ஆசைகளை அடக்கி வைக்கணும்
அனுதினமும் பஜனைகளில் கலந்து கொள்ளணும்
அன்னதானம் முடிஞ்சவரை நீ செய்யணும்
இருமுடியை உந்தலையில் நீ சுமக்கணும்
இறுதிவரை கால; நடையாய் மலை கடக்கணும் (ஐயப்பனின்)

பம்பையிலே நீராடி விளக்கேத்தணும்
ஐயன் நாமம் உள்ளத்திலே குடியேத்தணும்
பதினெட்டுப் படி ஏறி அவனைப் பாக்கணும்
பந்த‌ பாச‌ சுமைகளெல்லாம் நீ போக்கணும்
இருமுடியில் உள்ள‌ நெய்யை நீ படைக்கணும்
திருப்படியில் தேங்காயை நீ உடைக்கணும்
மகரஜோதி தரிசனத்தில் மனம் நிறையணு
மங்கலங்கள் நாளும் நாளும் பொங்கி வழியணும் (ஐயப்பனின்


வீடியோ

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Thulasimani Maalai aninthu Sabarimalai sentriduvom - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை)

பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே
பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை)

சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து
கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி
குணகரனை அனுதினம் நினைந்து
இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து
பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து
குருவடிவானவன் கருணையை அறிந்து
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே (துளசிமணி மாலை)

பவள‌ மணித் திருமார்பினிலே பந்தளராஜனின் ஆபரணம்
அவனியெல்லாம் போற்றிடவே அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்
பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்
நம் கவலையெல்லாம் மறந்திடவே கருணை மழையில் கூடிடுவோம் (துளசிமணி மாலை)

மலையாம் மலையாம் சபரிமலையாம் மலையின் மேல் ஒரு சாமியாம் கே. வீரமணி அவர்கள் பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Malayaam Malayaam Sabari Malayaam malayin mel oru Saamiyaam- K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics



மலையாம் மலையாம் சபரிமலையாம்
மலையின் மேல் ஒரு சாமியாம்

அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்
சரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்)

உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு
ஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு
காடும் மேடும் நடந்து செல்லும்
ஐயப்பன்மார்கள் கோடி உண்டு

எரிமேலிப் பேட்டைத்துள்ளி
அழுதை வழியே நடந்து சென்றால்
கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்
எங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல்
நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம்

நதியாம் நதியாம் பம்பா நதியாம்
பாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்
அந்த‌ நதியில் ஆடி ஐயனைத் தேடி
நாமும் போவாம் நீலிமலையாம்
நீலிமலையில் ஏறும் நம்மை ஏற்றும் சாமி ஐயப்பனாம்
குந்திவிடய்யா தள்ளிவிடய்யா என்று சொல்ல‌ வைப்பானாம்

பதினெட்டுப்படியும் கடந்து சபரிமாமலைக் கோவில் வந்து
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம்
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு நெய்யபிஷேகம் செய்வோமாம் (மலையாம்

விடியே

சபரிமலை கோவிலின் பெயர் மாறுகிறது..? புதிய பெயர் என்ன தெரியுமா?




சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என மாற்றுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அப்போது தேவசம் போர்டின் தலைவராக இருந்த பிரேயர் பாலகிருஷ்ணன், கோவிலின் பெயரை ஐயப்ப சுவாமி கோவில் என மாற்றி கூறினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, சபரிமலை கோவிலின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், ஐயப்ப சுவாமி கோவில் என்ற பெயரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் என மீண்டும் மாற்றியமைக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது

5 ஜனவரி, 2018

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கே. வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Karuppinil Udai aninthein kaluthinil mani aninthen - K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics



சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா - [குழு 2]

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்
இன்பமதைக் கண்டேனே ஐயப்பா
இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்
இன்பமதைக் கண்டேனே ஐயப்பா
என் இதயமதைத் தந்தேனே ஐயப்பா

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்
சாந்தி கொண்டேனே ஐயப்பா
சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்
சாந்தி கொண்டேனே ஐயப்பா - உன்
சக்தியைக் கண்டேனே ஐயப்பா



கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
(சரணம் சரணம் ஐயப்பா)

சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா - [குழு 2]

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள்.Onnam Thiruppadi Saranam Pon Ayyappa - K. Veeramani Ayyappan



குறிப்பு : இப்பாடல் இரு விதமாய் வழங்கப்படுகிறது : சாமியில்லாதொரு சரணமில்லையப்பா (அல்லது) சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ; எனப் பாடலாம்.

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினொன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதிமூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினாலாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினஞ்சாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ஸ்வாமியே....ய்
சரணம் ஐயப்போ
ஸ்வாமியே....ய்
சரணம் ஐயப்போ

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Sathiya Oli Parapum Sabarimalai - K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics



சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்

பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம்
பந்தள நாடனை நினைப்போம் அவன் சுந்தர மேனியை துதிப்போம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்

வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
பக்திபழரசம் குடிப்போம்
ஐயன் பாதங்களில் பற்றிப் பிடிப்போம்

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா.....

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள். Sabarimala kadu athu Sasthavin veedu - K. Veeramani Ayyappan Devotional songs Tamil



சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு
இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு

ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு )

மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் - நீ
சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு
ஆசைகளெல்லாம் நிறைவேறும் - நம்
காரியமெல்லாம் கைகூடும்
அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான்
கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா
புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு )

சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா (4 முறை

சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu Swami Ayyappan Devotional songs Tamil Lyrics



சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குது

ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.

வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாக பிறந்தவனே
பேதத்தை போராடி அழித்தவனே
ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே.
வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை
கிள்ளி எறிபவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sabarimalayil vanna Chandrodayam dharma sasthave sannidhiyil Swami Ayyappan Devotional songs Tamil Lyrics



சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்

கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை...நாமும்
கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி)

பாலெனச் சொல்லுவதும் உடலாகும் - அதில்
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்.... இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா...இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும்
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வாசமுடைய பன்னீர் அபிஷேகம்... எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் - அதில்
இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)
உள்ளத்தின் வெண்மைதன்னைக் கையிலெடுத்து - அதில்
உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்...ஹரி
ஓம்மென்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Vazhikattum Kula Deivam Nee Allavo Sabarimalai vazhum Manikandaney Ayyappan Devotional songs Tamil Lyrics



வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ....
மாநிலம் மீதினில்

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ....
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே .... யே........
எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே
என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே
என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ....
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி
அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி
அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி
அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி
சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி
சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி
தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி
தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ....
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ ..... வோ...... ஓ.. ஓ...ஓஓ. ஒ

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Idhayam entrum unakkaka Ayyappa Un pathamalare thunai - K. Veeramani Ayyappan

 Devotional songs Tamil Lyrics

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா
உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா .... ஐயப்பா
நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. ...ஐயப்பா

ஆரதமுதம் நீ பேரழகன் நீ
ஆரியங்காவில் வாழ்பவனும் நீ

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

அபயம் தந்திட சபரிமலை உண்டு ஐயப்பா
ஆறுதல் கூறிட உன் அருள் உண்டு ஐயப்பா

வேதமும் நாடும் வினைகளும் ஓடும்
எங்கள் நாவும் பாடும் ஞானமும் கூடும்

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

பண்ணமுதம் தந்தவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா
கண்ணழகு கொண்டவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா

விண்ணவரின் கண்மணியே சரணம் ஐயப்பா
எண்ணமதில் வந்திடுவாய் சரணம் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா ...

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

Tamil songs மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Margazhi



மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
காவி உடையும் கழுத்தில் மணியும் ..
காவி உடையும் கழுத்தில் மணியும்
அணிந்தவர் கோடி ஐயப்பா...
அணிந்தவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
பம்பையில் குளித்து பதினெட்டாம் படி ஏறுபவர் கோடி ஐயப்பா.......
ஏறுபவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

பார்வைக்கு இனிய மகர விளக்கை பார்த்தவர் கோடி ஐயப்பா
கோடி கோடி சரணங்கள் சொல்லும்
கோடி கோடி சரணங்கள் சொல்லும் பக்தர்கள் கோடி ஐயப்பா.....
பக்தர்கள் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி 

4 ஜனவரி, 2018

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா - வீரமணி ராஜூ பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Thalladi Thalladi nadai nadanthu Naanga Sabarimalai Vanthomayya - Veeramani Raju Ayyappan Devotional songs Tamil Lyrics



தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு
சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா
சாமி... (தள்ளாடி தள்ளாடி)

இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய்
நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று
பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு
நெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு
ஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

சாமியே,.... சரணம் ஐயப்போ...........
சாமியே,...... சரணம் ஐயப்போ .............
சாமியே,...... சரணம் ஐயப்போ .............

சாமி சரணம் ஐயப்ப‌ சரணம்