Translate

14 ஜனவரி, 2018

கன்னிமூல‌ கணபதிய வேண்டிக்கிட்டு நாங்க‌ கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் பாடல் வரிகள்.Kannimoola ganapathiyai vendikittu



கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க‌
ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்

குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2



ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாக‌ வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2

எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா x2



காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா x2
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு x2
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா x2

மகர‌ ஜோதியைக் கண்டு மனமார‌ சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா
சாமியே சரணம் x3…சாமியே .... சரணம் ..x2

2 கருத்துகள்: