Translate

8 ஜனவரி, 2018

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Saraname Saranam Ponn ayyappa - K. Veeramani Ayyappa song Tamil Lyrics



ஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌
முகில் வண்ணன் நாராயணன்
ஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன்
தேவர்கள் மகிழும் வண்ணம்
தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன்
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌
திவ்ய‌ நாமத்தைச் சொன்னவர்க்கே
தர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌
எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக்
கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே
சர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌
பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி
ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம்
சுவாமி மாரே ஐயப்பன் மாரே

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னைய்யப்பா
சரணம் சரணம் என்று சொல்லிப்பாடுவோம்
சபரிமலையிலே ஒன்று கூடுவோம்
கார்த்திகையில் மாலைதனைப் போட்டுக் கொள்ளுவோம்
மார்கழியில் அவன் புகழ் பாடி மகிழ்வோம் (சரணம் சரணமே)

பள்ளிக்கட்டைக் கட்டிக்கொண்டு யாத்திரை செல்ல‌
கல்லும் முள்ளும் மெத்தையென்று பாதங்கள் செல்ல‌
கோட்டை எரிமேலிதன்னில் பேட்டையும் துள்ள‌
நாம் ஆடிப்பாடி செல்வோம் ஐயன் புகழ் மணக்க‌ (சரணம் சரணமே)

காடுவழி போகும்போது கடுவாய் கரடி புலி
யானையைக் கண்டு அஞ்சாத‌ பேர்களுமுண்டோ
சமயத்தில் வந்து காக்க‌ மணிகண்டன் துணையுண்டு
சாஸ்தாவை நம்பி நாம் நடை கட்டுவோம் அந்த‌
சாஸ்தாவை நம்பி நாம் நடைகட்டுவோம் (சரணம் சரணமே)



பொன்னாபரண‌ மணிந்த‌ பொன்னம்பல‌ வாசனவன்
கற்பூரதீபமும் கண்டு மகிழ்ந்திடுவோம்
ஜோதியைக் கண்டவுடனே நாமெல்லோரும்
ஒன்று சேர்ந்து கூட்டுச் சரண‌ கோஷமும் போட்டு மகிழ்வோம் (சரணம் சரணமே)

கே. வீரமணி பாடிய‌ 'சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா' ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

கருத்துகள் இல்லை: